Wednesday, October 27, 2010

Movie Info: Moovendhar
Genre: Romance
Singer: Hariharan
Cast: Sarathkumar, Devayani
Music: Sirpy
Lyrics:

Pallavi:
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலில்
வீசச்சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்கவே மாட்டேன்
ஓஹோஹோ ஓஓஓஓஒ
ஓஹோஹோ ஓஓஓஓஒ
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

Charanam 1:
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனடமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கன்னமா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா

Charanam 2:
சேலை சூடி ஒரு சோலை போன வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானை தேடி சென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானை தேட சொன்னது மாறனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லம்மா

No comments: